Tag: ஒன்றிணைவோம்..!!
மட்டக்களப்பில் மார்ச் 12 இயக்கத்தினர் ‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்;” பதாகை காட்சிப்படுத்தல் ஆரம்பித்து வைப்பு !
மட்டக்களப்பில் ‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் ‘ எனும் தொனிப் பொருளில் தூய அரசியலுக்காக விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தல் இன்று செவ்வாய்க்கிழமை (12) மட்டு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் மார்ச் 12 இயக்கத்தினர் ஆரம்பித்து வைத்தனர். தேசிய மட்ட மார்ச் 12 இயக்கமானது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு தூய அரசியலுக்காக அரசியல் ஆட்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் ‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் ‘ எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு பதாகையினை காட்சி படுத்தும் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மார்ச் 12 இயக்கம் இணைப்பாளர் சபா.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசசர்பற்ற நிறுவனங்கள் பரதிநிதகள் பெண்கள் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுடனர்.
பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்காக ஒன்றிணைவோம்..!!
உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல் தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியாஇ இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவேஇ அதற்கான சந்தர்ப்பத்தை […]