Tag: கலாமணி
கல்வியியலாளர் கலாமணி மறைவு.!
வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும் இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியானார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளரானார். மேலும் உயர் கற்கைகளை மேற்கொண்டு […]