Tag: திருடன்
வெளிநாட்டு அழகி தங்கியிருந்த வீட்டில் திருடன் செய்த வேலை-மக்களினா உதவியை நாடும் பொலிசார்..!
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் […]
யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள செல்வா திரையரங்குக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான பொலிஸ் குழு திருட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த, 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.