Tag: துப்பாக்கி
யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா துப்பாக்கி சூடு-ஆறு இலங்கையர்கள் பலி-நடந்தது என்ன..?
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன. சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கி சத்தம்-ஒருவர் கவலைக்கிடம்..!
ரன்ன கஹந்தமோதர பகுதியில் இன்று புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கஹந்தமோதர பிரதேசத்தில் வசிக்கும் மீன்பிடிப் படகு ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது . தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
அதிரும் தென்னிலங்கை-மற்றுமொரு துப்பாக்கி வேட்டு..!
நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன் நாட்டை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு-ஒருவர் பலி..!{படங்கள்}
ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்..!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (02) பிற்பகல் அனுராதபுரம் பகுதியில் சமய நிகழ்வென்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான […]
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்..!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும்...
தொடரும் துப்பாக்கி வேட்டுக்கள்-அதிரும் தென்னிலங்கை-திணறும் பொலிசார்..!
காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. (02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த இருவர், அவரது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் […]
தொடரும் துப்பாக்கி வேட்டுக்கள்-அதிரும் தென்னிலங்கை-திணறும் பொலிசார்..!
காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
(02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த...
நேற்று நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூடு-முழு விபரம்..!
பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று (01) அஹுங்கல்ல பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லொகு பெடீ என்ற குற்றவாளியின் தரப்பினால் பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர். அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். ரிவால்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், கட்டுமானத்தில் இருக்கும் […]