Tag: நிகழ்நிலைக்
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் அமைச்சரவைக்கு.!
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும்.!
நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். “நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எக்காரணம் கொண்டும் […]