Tag: நீதிமனாறில்
யாழில் கசிப்புடன் கைதாகிய அழகிக்கு நீதிமனாறில் நடந்தது என்ன..?
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் 1500 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைதான பெண் விசாரணைகளுக்குப் பின்னர், நேற்றைய தினம் புதன்கிழமை (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அந்தப் பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, கடுமையாக எச்சரித்த நீதவான், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.