Tag: பகுதியில்
மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் மோதி விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தை கொலையின் பிண்ணனி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் ஒருவர் மூவர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த (15) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர் இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் […]
உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்து!
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இன்று ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்தபோது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை – கைதனவர்களுக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி […]
தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் 23 வயது அழகி கைது..!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், […]
சுழிபுரம் பகுதியில் திடீரென தோன்றிய புத்தர் மக்களின் எதிர்பினால் மாயம்..!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர். இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான […]
பொதுமக்கள் பகுதியில் ஏன் புத்தர் சிலை-சுழிபுர பிரதேச மக்கள் சொல்வதென்ன..!
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்தின் முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்களுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்படுகின்ற சைவ ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை […]
மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு..!{படங்கள்}
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று திங்கட்கிழமை (04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு […]
தமிழர் பகுதியில் சிறுவன் மாயம்..!
சிறுவனைக் காணவில்லை பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள் கிண்ணியாவைச் சேர்ந்த 14வயதுடைய யூசுப் என்கிற சிறுவனை (03/03/2024) காலை 7:30 மணியிலிருந்து காணவில்லை. இவர் சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள்: 0756887878 /0755278409 மேற்படி இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-20 வயது இளைஞன் பலி..!{படங்கள்}
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு […]