Tag: பரபரப்பு
போராட்ட களத்தில் பரபரப்பு!! ஒருவரது நிலை கவலைக்கிடம் – போராட்டகாரர்கள் குமுறல்!
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் […]
வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்திரெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது. பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் பரபரப்பு மற்றொரு துப்பாக்கிச் சூடு.
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான ‘சமன்கொல்லா’ என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயதை மீறிய உறவு-தமிழ் மாணவி விடுதியில் குழந்தை பெற்றதால் பரபரப்பு..!
தருமபுரி அருகே கல்லூரி மாணவிக்கு விடுதியிலேயே குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண் வாலிபர் ஒருவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த சம்பவம் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தருமபுரி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மாணவியின் வயிறு பெரிதான நிலையில் காணப்பட்டதால், அவருடன் பயின்ற மாணவிகள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது உடல்வாகு […]
ஐனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கபடுமா-அம்மையார் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு
ரத்தினப்புரி - எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்றிரவு (சற்றுமுன்) கைது செய்யப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய...
கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணையா?? முல்லையில் பரபரப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை நேற்று (ஜனவரி 7) கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குரவில்...
‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திம்புலாகல, சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின்...
வடமராட்சி கடற்கரையில் பரபரப்பு!
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அலையினால் அடித்து வரப்பட்ட சமய வழிபாட்டுடன் தொடர்புடைய மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது.இது மத வழிபாட்டு அமைப்பாக இருக்கலாம் என்ற குறிப்பிடப்படுகிறது.தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து வரப்பட்டிருக்கலாம்...