Tag: பாடசாலையில்
பாடசாலையில் தேநீர் அருந்திய ஆசரியைகளுக்கு நேர்ந்த கதி ..!
பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும், இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சுகவீனமுற்ற 6 பெண் ஆசிரியைகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாடசாலையில் கல்வியை தொடர இணைந்த அசானி..!
இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் ஆண்கள்,பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று (05.03.2024) காலை மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என […]
பெண்கள் பாடசாலையில் பற்றியெரிந்த தீ அலறி ஓடிய மாணவிகள்..!
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் பாடசாலையில் பற்றியெரிந்த தீ அலறி ஓடிய மாணவிகள்..!
மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை.அப்பகுதி...
செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாலை […]
மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}
மடு கல்வி வலயத்தில் உள்ள மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் 2024 தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரி அதிபர்..F.X.அன்ரன் சேவியர் தலமையில் இன்று (22) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மடுக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்A.J.பொஸ்கோ அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி S.R. யதீஸ் அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து […]
கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் கால்கோள் விழா..!{படங்கள்}
யா/கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 22.03.2024 புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடை பெற்றது. புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல்,மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் மாணவரும் தற்போது யா/ வயாவிளான் மத்திய கல்லூரியின் பிரதி அதிபருமான திரு.தயாபரன் குருக்கள் அவர்களும், சிறப்பு ,விருந்தினர்களாக முன்பள்ளி ஆசிரியர்கள்,ஸ்தாபக வம்சத்தினர்,மத குருக்கள்,புலம்பெயர் பாடசாலை பழையமாணவர் […]
சாமிமலை ப உள்ள கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்..!{படங்கள்}
இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன் வைத்து சாமிமலை கவரவில்லை பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட காரர்கள் […]
பாடசாலையில் திடீரென சுகயீனமுற்ற 18 மாணவர்கள்-நடந்தது என்ன..?
ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய – மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர். அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர். இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் […]