Tag: பாவனையால்
நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!
நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் பதிவாகும் மரணங்களில் 83 சத வீதமானவை தொற்றா நோய் காரணமாக ஏற்படுபவை. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களில் புகையிலை பாவனை பிரதான காரணமாக காணப்படுகிறது.இலங்கையர்கள் புகைப்பிடிப்பதற்காக மாத்திரம் தினசரி […]
யாழில் கஞ்சா வாங்க அம்மா பணம் கொடுக்கவில்லை-போதைப் பொருள் பாவனையால் இருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருள் பாவனையால் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயது இளைஞன் உயிரை மாய்த்துள்ளார். நீண்டநாளுக்கு பின்னர் போதைப்பொருள் பாவித்த 26 வயதான இளைஞன் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயதானவர் உயிரை மாய்த்த சம்பவம் மல்லாகத்தில் நடந்தது. அந்த இளைஞன் போதைப்பொருள், போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்தவர் அண்மையில்தான் விடுதலையாகியிருந்தார். […]
யாழில் ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருள் பாவனை : இளைஞன் பலி
யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்...
யாழில் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (31) இரவு நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (25 வயது) என்பவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்