Tag: புதைகுழி
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு- காபன் பரிசோதனைக்கான செலவீனம் தொடர்பில் அவதானம் !
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையானது திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார். திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் […]
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!{படங்கள்}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என வழக்கு மீண்டும் ஏப்ரல் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி […]
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு-மார்ச் 4ம் திகதி வரை ஒத்தி வைப்பு..!{படங்கள்}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை!மார்ச் மாதம் அகழ்வு பணி இடம்பெறுமா ? வழக்கு விசாரணை மார்ச் மாதம் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட […]
கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் வெளியான தகவல்..!{படங்கள்}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22.01.2024) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றையதினம் இட்பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே அகழ்ந்து […]
கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி – பெண் போராளிகள் இருவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்தில் இன்றும் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட இரு மனித எலும்பு எச்சங்கள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. இந்த அகழ்வு நடவடிக்கைகள்...