Tag: போதைப்பொருளுக்கு
யாழில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்..! {படங்கள்}
போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில […]
முல்லையில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் எடுத்தவிபரீத முடிவு.!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 இன்று பதிவாகியுள்ளது. 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 அகவையுடை குறித்த மாணவன் ஜஸ்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வடமாகாண […]