Tag: மக்கள்
சுன்னத் செய்வதை தடைசெய்வதாக தெரிவிக்கவில்லை -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ—
தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தயமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் ஆனால் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்வதை தடைசெய்வோம் என குறிப்பிடவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை […]
பொங்கி எழும் தமிழ் மக்கள் – நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்! வெடுக்குநாறி தமிழர் சொத்து!
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது-செல்வம் அடைக்கலநாதன்...
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர். இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மீது பொலிஸார் வன்முறையை உபயோகித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. என அவர் மேலும் […]
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. 7.30க்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர். மன உலைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண […]
மகா சிவராத்திரி-தடைகளை உடைத்து வெடுக்குநாறி ஆதிசிவனை தரிசித்த மக்கள்..!
வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம் இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேடஅதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் […]
பொதுமக்கள் பகுதியில் ஏன் புத்தர் சிலை-சுழிபுர பிரதேச மக்கள் சொல்வதென்ன..!
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்தின் முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்களுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்படுகின்ற சைவ ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை […]
யாழ் சுழிபுரத்தில் திடீரென தோன்றிய புத்தர்-குழப்பத்தில் மக்கள்..!
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த புத்தர் சிலை இரண்டு நாட்களுக்கு முதல் வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கும் நிலையில், புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் […]
இலங்கை மக்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 46.1 வீதமான பெண்களும், 30 வீதமான ஆண்களும் அதிக உடல் எடையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய நீரிழிவு நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் தொற்றா நோய்கள் தொடர்பிலான ஆபத்துக்களை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
சற்று முன் குறைந்த மின் கட்டணம்-மகிழ்ச்சியில் மக்கள்..!
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், […]
கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம்..!{படங்கள்}
சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம்03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.