Tag: மடுவில்
மடுவில் தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள்+போக்குவரத்தும் பாதிப்பு!{படங்கள்}
மன்னார் மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (3) நள்ளிரவு மடு தேவாலயம் – மடு ரோட் சந்தி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்வாறு அவர்களால் வெட்டப்பட்ட மரத்தின் குற்றிகளை மர்ம நபர்கள் ஏற்றி சென்ற நிலையில் கிளைகள் வீதியிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் இன்று […]
மடுவில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றி வளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது இந்த இரண்டு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது