Tag: யாழில்
யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
யாழில் வயோதிபர் எடுத்த அதிரடி முடிவு – இருபாலையில் சம்பவம்!
தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்! இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில் தொங்கியுள்ளார். இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சேர்ப்பிக்கப்பட்ட குறித்த நபர் சில மணி நேரங்களில் சிகிச்சை […]
யாழில் பொலிஸ் மா அதிபர் விசேட உரை!
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு இன்று(17) நடைபெற்றது. இதன்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 255 கிராம […]
யாழில் சிவலிங்கத்தை சுற்றி இருக்கும் வெள்ளை நாகம் – வெளியான காணொளி
யாழ்ப்பாணம் – வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே குறித்த காணொளி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார் , சிவலிங்க உருவச் சிலைகளும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து காணப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி குறித்த ஆலயத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தினர் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே குறித்த காணொளியை எடுத்ததாகவும், குறித்த கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்குமாறும் கோரி காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது !
கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழில் இளைஞன் செய்த மோசமான காரியம்
கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்
யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது !
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் இன்று 12.03.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திச போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
யாழில் 107 வது பிறந்த நாளை கொண்டாடிய ஐயா உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் 07.03.2024 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட […]
யாழில் பரசூட்டில் சாகசம் காட்டிய வீரருக்கு நேரந்த கதி..{காணொளி}
யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதன்போது சாகசத்தில் ஈடுபட்டபோதே விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானப்படை சாகச வீரருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.