Tag: விசாரணை.!
முன்னாள் புலி உறுப்பினர் – விசாரணை முன்னெடுக்கும் புலனாய்வுத்துறை.
இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின் கடற்கரும்புலியாக செயல்பட்டு புலம்பெயர் நாடு ஒன்றில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தஞ்சமடைந்துள்ள மன்னாரைச் சேர்ந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு என்பவர் தொடர்பாக புலனாய்வு துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் கடற்கரும்புலியாக செயல்பட்டு வந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு 2008 […]
கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு திடீர் விசாரணை.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன். இளைஞர்களிடையே இன நல்லிணக் கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் […]
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருக்கு பயங்கரவாத விசாரணை!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர். குறித்த கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான […]
ராஜீவ் கொலை வழக்கு மீள் விசாரணை செய்ய வேண்டும்..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமன சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. சாந்தனின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக செய்வதற்கு மூன்று தரப்புகள் சிறப்பாக பங்களிப்பு செய்திருக்கின்றன. ஒன்று […]
மருந்து நிறுவனங்கள் மீது விசாரணை.!
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் […]
யாழ் கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்
யாழ் கல்வியங்காட்டில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி சிறுமி தர்மிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்...