Tag: உத்தியோகத்தர்.
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தர் ! நடந்தது என்ன ?
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் யுவதியொருவரும் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். இதன்பின் அதை பார்த்த சிலர் இருவரும் அலுவலகத்துக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைடுத்து அங்கு வந்த பொலிஸார் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். நபர் மட்டும் வெளியில் வந்து தன்னை ஒரு அரச உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் வேறு யாரேனும் உள்ளார்களா என கேட்டபோது தனது தோழி உள்ளார் எனவும் இந்த அலுவலகம் அவரது அலுவலகம் எனவும் மாலை நேரங்களில் அதில் அவல் ஓய்வு எடுக்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அத்தோழி மலசலக்கூடத்தை பயன்படுத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணைசெய்ததைத்தொடர்ந்து அப்பெண் 20 வயது மாணவி என தெரியவந்துள்ளது. […]
நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை...
இளம் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட எழுவர் கைது-கைவிடப்பட்ட வீட்டில் நடந்த கூத்து..!
கற்பிட்டி – நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் இளம் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று போதைப் பொருள் பாவிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த […]
யாழ்ப்பாணத்தில் இளைஞனை மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த இளைஞர் சேவை உத்தியோகத்தர் மதன்ராஜ்!{ஓடியோ இணைப்பு}
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஒருவர் பேச்சுவார்த்தைக்காக இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்து, மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சங்கானை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தராக கடமை புரியும் மதன்ராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார். ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழகம் ஒன்று நிர்வாக தெரிவு கூட்டம் வைக்காமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் கழகமானது ஏனைய கழகங்களை போல் அல்லாது வருடா வருடம் பதிவு […]
பொலிஸ் உத்தியோகத்தர் இருவரை புரட்டியெடுத்த சீனப்பெண்..!
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் […]
கண்காணிக்க பேரூந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமே பாலியல் சில்மிஷம் புரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்..!
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாடு தழுவிய யுக்திய நடவடிக்கையுடன் […]
விற்பனை நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த காரியம்..!
வெரஹெர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் இருந்து இரு தேயிலை பொதிகளை திருடியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார். இவர் தனது காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி அன்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக்கொண்ட […]
பாதுகாப்பு உத்தியோகத்தர் கடலில் சடலமாக மீட்பு..!
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார். 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் […]
பணியிடமாற்றம்-யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்..!
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். […]