Tag: கிராம
அதிகாரிகளையும் கிராம மட்ட அமைப்புக்களையும் புறம் தள்ளும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு!
நீண்ட காலத்தின் பின் அரசாங்கத்தினால் பொது மக்களின் அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியானது இம்முறை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் ஊடாக கிராமங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிதி ஒதுக்கீட்டை கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களின் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் கேட்டறிந்து அவ் நிதியை பயன்படுத்துமாறு நிதி அமைச்சினால் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு இருந்த போதும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு என்ற பெயரில் தனது அரசியல் சுயலாபங்களுக்காக […]
பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம்..!{படங்கள்}
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம் புதன்கிழமை (6) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை 9.30 மணியளவில் பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதி க்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை,குறித்த கிராம மீனவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் […]
புதிய கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சை -சற்று முன் வெளியான தகவல்..!
புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார் . இதில் பங்கு பற்றியவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார். 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் […]