Tag: சத்தம்-ஒருவர்
தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கி சத்தம்-ஒருவர் கவலைக்கிடம்..!
ரன்ன கஹந்தமோதர பகுதியில் இன்று புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கஹந்தமோதர பிரதேசத்தில் வசிக்கும் மீன்பிடிப் படகு ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது . தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சத்தம்-ஒருவர் காயம்..!
பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான ‘வனாத்தே பிம்சர’ என்று அழைக்கப்படும் பிம்சர குணசேகர நேற்று (19) இரவு சுடப்பட்டார். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு […]