Tag: செல்ல
இலங்கை செல்ல சாந்தனுக்கு அனுமதி..!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை […]
இலங்கை செல்ல சாந்தனுக்கு அனுமதி..!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து...
இலங்கை பெண்கள் இனி வெளிநாட்டு வேலைக்கு செல்ல தடையா-வெளியான முக்கிய தகவல்..!
வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ருமேனியா செல்ல பணம் கொடுக்காத தந்தை-விபரீத முடிவெடுத்த மகன்..!
புத்தளம் , முந்தல் – மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முந்தல், மங்கள எளிய பகுதியைச் சேர்ந்த காவிந்த மதுசங்க (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் மதுரங்குளி வாராந்த சந்தைக்கு சென்ற நிலையில், வீட்டில் குறித்த இளைஞனும், தந்தையுமே இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மீன் வாங்குவதற்காக […]
நாடாளுமன்றம் செல்ல கெஹலிய மறுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையை அடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.