Tag: தமிழக
தமிழக பாடசாலையில் கல்வியை தொடர இணைந்த அசானி..!
இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மக்களை கொச்சை படுத்திய தமிழக மீனவ விசைப்படகு சங்க தலைவர்..!
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள உதவிகளை திருப்பி கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க […]
இலங்கை மக்களை கொச்சை படுத்திய தமிழக மீனவ விசைப்படகு சங்க தலைவர்..!
இலங்கை மக்களை கொச்சை படுத்திய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள...
தமிழக மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்..!{படங்கள்}
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை சனிக்கிழமை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட போவதாக தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீன்பிடி விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை […]
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் சிறை..!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 07ஆம் திகதி 19 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன. கைதான கடற்தொழிலாளர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் […]
கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு!
இலங்கை – இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். மேலும் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி தமிழக மீனவர்கள் நடைபயணம்..!{படங்கள்}
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் தேதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்ததுடன் அதிலிருந்து இரண்டு மீன்பிடி விசைப்படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒருவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டுள்ளதால் […]
எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் வழிசெய்ய வேண்டும்.!
இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள் வாழ்வாதாரத்தை சூறையாடி, எங்களை பட்டினிச்சாவிலே இட்டுச் செல்வது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மீது கருணை இல்லாத அல்லது துரோகமான செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் […]
19 தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!
தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில்...