Tag: பனைமரக்
சட்டவிரோதமாக பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!
அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.