Tag: பல்கலையில்
சாந்தன் அவர்களின் மறைவிற்கு யாழ்ப்பாண பல்கலையில் கறுப்புக் கொடி..!{படங்கள்}
மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான சாந்தன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது சடலம் நேற்றையதினம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை.
சாந்தன் அவர்களின் மறைவிற்கு யாழ்ப்பாண பல்கலையில் கறுப்புக் கொடி..!{படங்கள்}
மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான...
யாழ் பல்கலையில் தாய்மொழி தினம்..!{படங்கள்}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இன்று காலை 9.30 மணியளவில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது “தாய்மொழி பற்றிய கருத்தியல்” எனும் தலைப்பில் சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் இ. அண்ணாமலை நிகழ்நிலையில் உரையாற்றினார். இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் […]
விரிவுரைகளை துரிதப்படுத்த கோரி யாழ் பல்கலையில் வகுப்பு புறக்கணிப்பு..!{படங்கள்}
விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் […]
சுதந்திர தின எதிர்ப்பு – பல்கலையில் கறுப்புக்கொடி ..!
சுதந்திர தினத்தை கரி நாளாக கடைப்பிடிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்...