Tag: பார்த்த
தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் போனை விற்று காசு பார்த்த பொலிசார் ..!
அம்பாறை பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கிணற்றை எட்டி பார்த்த வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-பொம்மை போல் மிதந்த சிசுவின் சடலம்..!
வீட்டுத் தோட்டமொன்றின் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது குருணாகல் – ரிதிகம – வெலகெதர பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மோட்டரை இயக்குவதற்கு முன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றை சோதனையிட சென்றுள்ளார். இதன்போது அவர் கிணற்றில் பொம்மை ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில் குச்சியொன்றின் ஊடாக பொம்மையை அகற்ற முயன்ற போது அது பொம்மை அல்ல சிசுவின் சடலம் என அடையாளம் […]