Tag: பொலிஸ்
160வது பொலிஸ் வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 160வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த […]
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்
இன்று (20) மாலை ட்ரக் வாகனமொன்றில் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார். இதன்போது, அவர் மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ட்ரக் […]
யாழில் பொலிஸ் மா அதிபர் விசேட உரை!
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு இன்று(17) நடைபெற்றது. இதன்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 255 கிராம […]
யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் – நெடுங்கேணியில் பதற்றம்!
வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது. நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உயரதிகாரியின் சண்டித்தனம்-பின்னர் நேர்ந்த சம்பவம்..!
உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியின் தாக்குதலில் பிரதேசவாசிகள் இருவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முந்தலம் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசவாசிகள் குழுவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தாக்குதலின் போது, அதிகாரி மிகவும் […]
யாழில் மண் கடத்தல்-சாரதி தலை தெறிக்க ஓட்டம்-துரத்தி சென்ற இளைஞர்களை தூக்கிய பொலிஸ்..!
இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர். இதன்போது டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார். தமது ஊரில் மண் கடத்தல் இடம்பெறுவதை அறிந்த அந்த ஊர் இளைஞர்கள் மூவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் டிப்பரை […]
இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை..!
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது. நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் நேற்று 01.03.2024 காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இப் பகுதியில் சற்று காற்று பலமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது. இத் தீயினால் […]
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது.நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் நேற்று...