Tag: போலிப்
போலிப் புத்தருக்கு பிணை
“அவலோகிதேஸ்வர போதிசத்வா” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தான் புத்தரின் அவதாரம் என்று கூறிக்கொண்ட இவர், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.