Tag: மாவட்ட
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட ரி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை நாளையதினம் (22.03.2024) விமான நிலையத்தில் அமைந்துள்ள ரி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கியுள்ளனர். குடிவரவு குடியகல்வு தொடர்பான குற்றம் ஒன்றில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த […]
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு.
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும், நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தினரின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் அதனுடன் இணைந்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூடட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க […]
பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!
அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு […]
யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருக்கு பயங்கரவாத விசாரணை!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர். குறித்த கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான […]
சிறப்பாக நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி.
சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர். LYCA Gnanam Foundation நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும், சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு, BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டிமிக சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை திருமதி. சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.சுதர்சன், […]
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்றையதினம் மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரத்தை எமக்கும் தாருங்கள் என கேட்க்கவில்லை. மாறாக சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை […]
யாழ் மாவட்ட செயலாளர்-பிரியா விடை..!{படங்கள்}
யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக கடமையாற்றி ஓய்வு நிலை பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய தமிழ் கலை வடிவங்களுடன் வரவேற்கப்பட்டு தொடர்ச்சியாக கடமையினை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்பொழுது யாழ் மாவட்ட செயலரின் […]
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு..!
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த வைபவம் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக இவர் கடமை ஆற்றுவார்.