Tag: மீனவர்களுக்கு
மருதங்கேணி மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் அதிகளவான சாளை மீன்கள் பிடிபட்டுள்ளன ஆழியவளை,உடுத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலருக்கே அதிகளவான சாளை மீன்கள் வலையில் அகப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பரப்பில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று 12.03.2024 காலை அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன.
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் சிறை..!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 07ஆம் திகதி 19 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன. கைதான கடற்தொழிலாளர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் […]
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன....