Tag: விபத்து-இருவருக்கு
மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் […]
கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!
கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் – சிரிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றி வந்த பஸ்ஸும், புஸல்லாவைப் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. வானின் சாரதி நித்திரைக் கலக்கத்தில் […]
யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்