Home இலங்கை செய்திகள் சொன்ன வேலை செய்யாததால் மகனை கொடூரமாக தாக்கிய தந்தை..!

சொன்ன வேலை செய்யாததால் மகனை கொடூரமாக தாக்கிய தந்தை..!

தந்தையினால் பிரம்பால் தாக்கப்பட்ட 13 வயதுடைய மகன் திங்கட்கிழமை (04) காலை மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மகனை தோட்டத்திற்கு அருகிலுள்ள புற்களை அகற்றுமாறு தந்தை கூறிய போது அதைச் செய்யாததால் கோபமடைந்த தந்தை மகனை தாக்கியுள்ளார்.

வீட்டில் இருந்த பிரம்பால் சிறுவனின் தலை மற்றும் கால்களில் பலமுறை தாக்கியதாகவும், அதனை தடுக்க முயன்ற போது தானும் தாக்கப்பட்டதாகவும் தாய் அராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் இதற்கு முன்னரும் பல முறை சிறுவனை தாக்கியதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version