காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
(02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த இருவர், அவரது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.