Home இலங்கை செய்திகள் பற்றி எரிந்த நிறப்பூச்சு தொழிற்சாலை-பதறி ஓடிய ஊழியர்கள்..!

பற்றி எரிந்த நிறப்பூச்சு தொழிற்சாலை-பதறி ஓடிய ஊழியர்கள்..!

பாணந்துறை சமகி மாவத்தை பகுதியில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version