Home Uncategorized பொதுப் போக்குவரத்தில் அத்துமீறினால் ஐந்துவருட சிறை.!

பொதுப் போக்குவரத்தில் அத்துமீறினால் ஐந்துவருட சிறை.!

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள்.

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை, பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version