Home Uncategorized ‘அசேல’வுக்கு நஞ்சூட்ட முயன்றவர் கைது!

‘அசேல’வுக்கு நஞ்சூட்ட முயன்றவர் கைது!

கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த அசேல என்ற யானைக்கு விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தர்பூசணி (Watermelon) காய்க்குள் விஷத்தை கலந்தே இந்த நபர் அசேல என்ற யானைக்கு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  

கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு சில சம்பவங்களுக்காக கண்டி பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையின் போது இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பில் கதிர்காமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட​தை அடுத்து.  அதிகாரிகள் குழுவை அனுப்பி சந்தேக நபரை அழைத்து வந்ததாகவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version