Home jaffna news அருகே வந்த கூலித்தொழிலாளியை ஏற்றாமல் சென்ற பாதைப் படகு! -பாதையில் செல்லும் பயணிகள் விசனம்.!

அருகே வந்த கூலித்தொழிலாளியை ஏற்றாமல் சென்ற பாதைப் படகு! -பாதையில் செல்லும் பயணிகள் விசனம்.!

ஊர்காவற்றுறை – காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர்.

மேலும், தமக்கு வேண்டிய எவராவது, குறிப்பாக பெண்கள் தூரத்தே வந்தாலும் காத்திருந்து அவர்களை ஏற்றிச் செல்லும் பாதைப் பணியாளர்கள் ஏனையவர்கள் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை 8.45 மணிக்கு பாதை புறப்படவேண்டிய நேரம் ஆகியும் கூட இரு பெண்களுக்காக காத்திருந்து ஏற்றிவிட்டு, ஊர்காவற்றுறைக்குச் செல்லவேண்டிய அப்பாவி கூலி தொழிலாளி ஒருவர் கை காட்டியவாறு அருகில் வந்தும் கூட அவரை ஏற்றாமல் சென்றனர். இவர்களின் செயலைப் பார்துக்கொண்டிருந்த தாங்கள் பணியாளர்களிடம் நியாமம் கேட்டபோதும் அவர்கள் சாட்டுப்போக்குச் சொல்லிவிட்டுச் சென்றனர் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் பாதையில் மதுபோதையில் பணியாற்றிய ஒருவர் பயணி ஒருவரைத் தாக்கியதை அடுத்து அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இதையடுத்து சீராகச் செயற்பட்ட பாதைப் பணியாளர்கள் தற்போது மீண்டும் பயணிகள் விடயத்தில் பாரபட்சம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர் எனவும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளர்.

இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.