அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 75 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியவை தொடர்பில் கொழுப்பைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக விளம்பரம் ஊடாக அறிமுகமான நிறுவனம் ஒன்றின் பெயரில் 75 இலட்சம் ரூபாய் பணத்தை கட்டம் கட்டமாக வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
ஆனால் பணம் வைப்பிலிடப்பட்டு நீண்ட காலமாகியும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாமையால், யாழ்ப்பாண பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையெடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், சந்தேகநபரை கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.