Home Uncategorized இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டித்தொடர் இன்று ஆரம்பம்.!

இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டித்தொடர் இன்று ஆரம்பம்.!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (09) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பகல் – இரவு ஆட்டமாக இடம்பெறும் இன்றைய போட்டி பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில்இ அதில் 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையேஇ டெஸ்ட் போட்டியைப் போன்று ஒருநாள் தொடரையும் வெல்வதே அணியின் நோக்கம் என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.