Home இலங்கை செய்திகள் இலங்கை குழந்தைகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கை குழந்தைகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை குறைந்த மற்றும், உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் குடும்ப சுகாதார பணியக அதிகாரி வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தாலும் எவரும் அதனை கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், குழந்தைகளின் உயரம் மற்றும் எடை குறைவு போன்ற ஊட்டச்சத்து நெருக்கடிகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.