Home இந்திய செய்திகள் உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே

உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே

புற்றுநோய் காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே உயிரிழந்துவிட்டார் என்று நேற்று முன் தினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ‘நான் இறக்கவில்லை. உயிரோடு தான் இருக்கிறேன்’ என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

கர்ப்பப்பை புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் என்பவற்றால் பூனம் பாண்டே பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது நெருங்கிய உறவினர்கள் ருவிற்றரில் பதிவிட்டிருந்தனர். இதனால் கோடிக்கணக்கான ரசிர்கள் பூனம் பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்தநிலையில் ‘ நான் இறக்கவில்லை. வாய்ப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி எனது நெருங்கிய உறவினர்கள் மூலமாக்க இறந்துவிட்டதாக நாடகமாடினேன்’ என்று சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே. அத்துடன் தான் புற்றுநோயில் இருந்து முழுதாக மீண்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.