Home இலங்கை செய்திகள் உயிர் காக்கும் வைத்தியர் செய்த மோசமான செயல்..!

உயிர் காக்கும் வைத்தியர் செய்த மோசமான செயல்..!

கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைத்தியர் இரவு நேரத்தில் ரகசியமாக காரில் சென்று பல்வேறு பகுதிகளில் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் போதை மாத்திரைகளை பெற்றுக்கொண்டு இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

குறித்த வைத்தியர் இன்று (14) கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்