இன்று 05.03.2024 , புதன்கிழமையன்று யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் , கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீஷன் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் ,கிறிசலிஸ் நிறுவன திட்ட முகாமையாளர் திரு. மகேஸ்வரன் பிரபாகரன், சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் திரு .அரசகேசரி கிறகர் ஜொகான்சன், பால்நிலை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் திரு. பு. தர்மேந்திரா, சமூக பொருளாதார ஆலோசகர் திரு. செல்வின் இரணியல், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் செல்வி. சாந்தாதேவி தர்மரட்ணம், மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , மற்றும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்.
மாவட்டத்தில் அடையாளபடுத்தபட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் , அதற்கான உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.