மேஷம்
aries-mesham
துன்பங்களே வாழ்க்கையானால், துன்பங்களே இன்பமாகத் தெரியும். மாணவ, மாணவிகள் மிகவும் கருத்துடன் படிக்க வேண்டிய காலம். மனைவி, மக்களின் மருத்துவச் செலவுகள் கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
மனத் திருப்தி அதிகரிக்கும் வண்ணம் தனவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணம் மனதில் எழும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும். இல்லத்தில், இன்பம் இரு கரையும் புரண்டோடும்.
மிதுனம்
gemini-mithunum
மனைவி, மக்களால் வீண்செலவுகள் ஏற்படும். மிகவும் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கி வீட்டுச் செலவுகளைக் குறையுங்கள். புதிய மாற்றங்களால் தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
கன்னி
virgo-kanni
உடன்பிறப்புக்களின் ஒற்றுமை ஓங்கும். கோவில், குளப் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மகரம்
capricorn-magaram
அவமானம், கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்
cancer-kadagam
உங்கள் திறமைகளை வெளிக்காட்டி, முடியாத காரியங்களையும் முடித்து வைப்பீர்கள். குடும்பத்தில் புதிய வரவாகக் குழந்தை பாக்கியம் ஏற்படலாம். திருமண விஷயங்கள் திருப்திகரமாக நடக்கும்.
சிம்மம்
leo-simmam
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் பணியாளர்களின் உதவியும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
துலாம்
libra-thulam
தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றித் துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
மீனம்
pisces-meenam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதுப்புது ஆராய்ச்சிகளும், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
தனுசு
sagittarius-thanusu
தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இல்லத்தில் இன்பம் அதிகரிக்கும். வரவேண்டிய வரவினங்கள் வந்து வாழ்க்கை வளம் பெருகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்கி அகமகிழ்வீர்கள். வீட்டில் பெண்களின் மதிப்பு பெருமளவு உயரும்.
கும்பம்
aquarius-kumbam
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. மனோபயம் மற்றும் தூக்கக் குறைவு ஆகியவை ஏற்படும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம். வயிற்று உபாதைகள் எழலாம்.