Home jaffna news ஏழு நாட்களில் கசந்த ரிக்ரொக் களியான வாழ்க்கை!! யாழ் இளைஞனை கைவிடும் கனடா யுவதி

ஏழு நாட்களில் கசந்த ரிக்ரொக் களியான வாழ்க்கை!! யாழ் இளைஞனை கைவிடும் கனடா யுவதி

கடந்த வாரம் திருமணத்தில் இணைந்த ரிக்ரொக் காதலர்களான கனடா யுவதியும், வடமராட்சி இளைஞனும் இந்த வாரம் விவாகரத்து செய்ய தீர்மானித்துள்ளனர்.

மனைவி முதுகு தெரியும் விதமாக கவர்ச்சியாக உடையணிகிறார் என ஆரம்பித்த மோதல், உடல்ரீதியான தாக்குதலாக மாறியதையடுத்து, கணவரை பிரிந்து செல்லும் முடிவை கனடா காதலி எடுத்தார்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரும், கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் ரிக்ரொக்கில் அறிமுகமாகி காதல் வசப்பட்டுள்ளனர்.

கனடா யுவதி சில வருடங்களாக ரிக்ரொக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

சில மாதங்களாக யூரியூப்பில் வீடியோக்கள் பதிவிடும் வடமராட்சி இளைஞன் ஒருவர், ரிக்ரொக் மூலம் அந்த பெண்ணுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.

கடந்தவாரம் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஒரே சமயத்தை சேர்ந்த ஜோடியின் திருமணம், அவர்களின் மத தலம் ஒன்றில் சம்பிரதாயபூர்வமாக நடந்துள்ளது.

இந்த நிலையில், சில நாட்களின் முன்னர், திருமண சடங்கை நடத்தி வைத்த மதகுருவிடம் சென்ற கணவன், தனது மனைவி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது அழைப்புக்களிற்கு பதிலளிப்பதில்லையென்றும், அவரை மீண்டும் இணைத்து வைக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

ரிக்ரொக்

மதகுரு, கனடா பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, கணவனின் சித்திரவதைகளை அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த அன்று மாலையில் வீட்டில் தான் அணிந்திருந்த ஆடையில் முதுகுப்பகுதி தெரியும் விதமாக காணப்பட்டதாகவும், தனது நண்பர்கள் கிண்டலடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மனைவியின் ஆடைகள் பற்றி தினமும் முரண்பாடு முற்றி, திருமணமான 3வது நாளிலேயே மனைவியை, அந்த இளைஞன் தாக்கியுள்ளார். எனினும், கணவனின் விருப்பப்படி ஆடை அணிய முடியாதென மனைவி மறுத்து விட்டார்.

அதன் பின்னரும் முரண்பாடுகள் தொடர்ந்து, கணவனின் தாக்குதல் தொடர்ந்ததையடுத்து, மனைவி வீட்டிலிருந்து புறப்பட்டு, கனடா செல்வதற்காக கொழும்பில் தரித்து நின்ற தனது பெற்றோரிடம் சென்று விட்டார்.

மதகுருவின் சமரச முயற்சிகள் வெற்றியளிக்காததையடுத்து, இருவரையும் சட்டப்படி செயற்படுமாறு ஆலோசனை கூறி ஒதுங்கி விட்டார்.

மனைவி வீட்டிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, வேட்டி சட்டை அணிந்த தனது புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன், பண்பாட்டு காவலனாக கருத்துக்களை இட்டிருந்தார்.

மதகுருவின் சமரச முயற்சியின் போது, அந்த புகைப்படங்களையும், கருத்துக்களையும் நீக்கி விட்டு, மனைவியை சமாதானப்படுத்தும் விதமான கருத்தையும் இட்டிருந்தார்.

யாழ் நகரிலுள்ள சிரேஸ்ட பெண் சட்டத்தரணியொருவர் ஊடாக அந்தப் பெண் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிய முடிந்தது.

Exit mobile version