Home இலங்கை செய்திகள் கடலில் மூழ்கிய மாணவர்கள்-பின்னர் நடந்த சம்பவம்..!

கடலில் மூழ்கிய மாணவர்கள்-பின்னர் நடந்த சம்பவம்..!

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று (12)  பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கினர்.

மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் குழுவைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Exit mobile version