Home Accident news செல்லக் கதிர்காமத்தில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

செல்லக் கதிர்காமத்தில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

செல்லக்கதிர்காமத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்துகொண்டிருந்த வேனொன்றே வீதியை விட்டு விலகி, லொறி மற்றும் மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேனில் ஆறு பேர் பயணித்துள்ளனர், விபத்தையடுத்து காயமடைந்த அறுவரும் கதிர்காமம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதன்போது ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை மற்றுமொருவர் உயிரிழந்தார். 25 மற்றும் 26 வயதுகளுடைய கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.