Home இலங்கை செய்திகள் (கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம்...

(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது — நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ..!{படங்கள்}

இந்த நாட்டை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக  தமிழர், சிங்களவர் பறங்கியர், முஸ்லீம்கள் மலேயர்கள்  உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948 சுதந்திரத்தை பெற்ற போதும்  1972ம்  ஆண்டு அரசியல் அமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தை பெற்றோம். இந்த ஒற்றுமையை  அரசியல்வாதிகள் பிரித்;து நாசமாக்கி அரசியல் செய்;தார்கள் இதனால் நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது எனவே எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழக்கூடிய  நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும்  நேற்று சனிக்கிழமை (24) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 40 வருடத்துக்கு மேலாக அரசியல் குழப்பம் காரணமாக மிகவும் துன்பகரமான காலத்தில் இருந்திருக்கின்றோம் இந்த நாட்டிலே நாங்கள் பிறந்தது அதிஸ்டமாக இருந்தபோதும் கடந்த 40 வருடமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த நாட்டில் நாங்கள் பிறந்தது துரவஸ்டமானது என நினைத்தோம்

கடந்த காலங்களில் நாங்கள் கிராமங்களை அழித்தோம் குண்டு வைத்தோம், எரித்தோம் போன்ற வன்முறையில் ஈடுபட்டோம் அப்படியான ஒரு நாட்டில்தான் இவ்வளவு காலமாக வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நாட்டில் பௌத்த, இந்து,, கிறிஸ்த, முஸ்லீம் சமயம் ஆகிய 4 சமயங்ககளைச் சேர்ந்த மக்கள் அன்பாக ஒன்றிணைந்து வாழவேண்டும் என  எல்லா மதங்களும் போதித்துள்ளது அதேவேளை வேவ்வேறு மொழிகள் வேவ்வேறு கலாச்சாரம் கொண்டதாக இருந்தபோதும் இனங்களை பிரிப்பதற்காக அல்ல அவர்களை ஒன்றிணைப்பதற்கு சோர்ப்பதற்காக செயற்பட்டோம் .

இதேவேளை ஒற்றுமையாக வாழவேண்டும் என இருந்தபோதும் கடந்த காலங்களில் இந்த அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறு  தேர்தல் காலங்களிலே மக்களை பிரித்;து அவர்களை நாசமாக்கி இந்த நாட்டு அரசியல் செய்;தார்கள் இது தான் இந்த நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது

ஜனநாயகம் என்பது நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழுவேண்டும் என்பதை தான்கு குறிப்பிடுகின்றது  இருந்தபோதும் ஜனநாயத்துக்கு எதிராக சில அரசியல் தலைவர்கள்  செயற்பாடுகளை செய்துவருகின்றனா.;

இந்த நாட்டிலே பிறந்த தமிழ் முஸ்லீம் சிங்களவர், பறங்கியர் யாராவது வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு இரண்டாவது பிரஜைகளாகதான் கனிக்கின்றனர்.
நாங்கள் இந்த நாட்டை அழித்து நாட்டை பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதுதான் இந்த துரவஸ்டமானது என்பதுடன் நாட்டில் எல்லோரும் ஒன்றினைந்து எதிர்கால சந்ததியாவது நிம்மதியாக வாழக்கூடிய நிலைய ஏற்படுத்தவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அதனை அரசாங்கத்தல் மாத்திரம் செய்யமுடியாது எல்லோரும் ஒன்றினைந்தால் மாத்திரமே இலகுவாகு முன்னெடுத்துச் செல்லமுடியும் நாங்கல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பலமுறை முயற்சித்தோம் அது மேல் இருந்து கீழானதாக சமாதானமாக இருந்தது ஆனால் கிராமங்களில் இருந்து மேல் நோக்கியதான சமாதானத்தை மேற்கொள்ளவேண்டும்

எனவே தான் நாங்கள் கிராமங்களில் இருந்து மேல் நோக்கிய சமாதானம் என்பதை மாற்றி அமைத்துள்ளோம் 2024 ம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டம் நிகழ் நிலை காப்பு சட்டம் இது சமூக முரண்பாட்டை இல்லாமல் செய்வதற்காக கொண்டுவந்தோம்.

கிராமங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்க அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர் அது சரியான முடிவுகளை ஏற்படுத்தப் படவில்லை எனவே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமானசகவாழ்வு சங்கங்கள் எனும் திட்டத்தின் மூலம் கிராமங்களின் ஆட்சியை ஏற்படுத்துவதாகும்.

நாட்டில் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட இந்த நாட்டிலே 11 ஆயிரம் கிராமிய அமைப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். இந்த கிராமிய ஆட்சி மூலம் கிராமத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கவேண்டும். இந்த அமைப்பின் தலைவர்களாக இருப்பவர்களின் முதலாவது இலக்கு கிராமத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதுதாகும்.

எனவே இதன் மூலம் கிராமத்தின் அபிவிருத்தியை நிறுத்த முடியாது  சமாதானத்தை குலைக்கமுடியாது அதன் வளர்ச்சியை தடுக்கமுடியாது அதேவேளை  இந்த போதை பொருள் சட்டவிரோத மதுபாவனை வியாபாரிகளை இல்லாமல் செய்யமுடியும் சிறார்களை பாதுகாக்கமுடியும்

மக்களுக்கு நன்றாக தெரியும் யார் யார் போதை பொருள் மற்றும் சட்டவிரோத மதுபாவனை வியாபாரிகள் பாவிப்பவர்கள் என அனைத்தும் தெரியும்  ஆனால் அவர்களை காட்டி கொடுப்பதற்கு அவர்களுக்கு சக்தியில்லை எனவே  கிரா மட்டத்தில் ஒற்றுமையாக இருப்போம் ஆனால் இந்த சட்டவிரோ செயற்பாட்டிற்கு முகம் கொடுக்க முடியும்.

எனவே இப்படியான செயற்பாடுகளை பொலிசார் மற்றும்  அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அதனை தீப்பதற்கு முழு அதிகாரங்களையும் கிராம மட்ட தலைவர்களுக்கு வழங்க இருக்கின்றோம்

அதேவேளை கிராமத்தில் விளையாட்டு, காலாச்சார மற்றும் ஏனைய விழாக்களாக இருந்தாலும் அதனை வழிநடத்தி பாதுகாக்க கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் கிராமங்களின் அபிவிருத்தி அரசியல்வாதிகளின்; திட்டங்கள் இல்லாமல் அந்த கிராம  தலைவர்களுடைய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க அந்த அதிகாரத்தை வழங்க இருக்கின்றோம்.

கிராமங்களின் அபிவிருத்திக்கா  செயற்படுகின்றவர்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகள் இல்லாத ஒருவராக இருக்கும் அதேவேளை கிராமக்களின் உற்பத்தி   போன்ற அதிகாரம் வழங்கப்படும்.  மொழி பிரச்சனை இருக்கின்றது அதனை நிவர்த்தி செய்ய திட்டங்கள் திட்டமிட்டுள்ளோம்.

சமூக கல்விதிட்ட மூலம் அரசியல் கொள்கைகள் அரசியல் திட்டங்கள் பற்றி போதிப்பதுடன் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல். சரியான அரசியல் தலைவர்களை நாங்கள் தெரிவு செய்யாமல் பிழையானவர்களை தெரிவு செய்து ஆட்சி அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதால்  பாதிக்கப்படுவது நாங்கள் தான்.

மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாத காரணத்தால் அந்த பிழையான அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றோம் எனவே மக்களுக்கு அரசியலை போதிப்பதால் அவர்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் உண்மையில் உங்கள் செயற்பாடுகள் அனைத்தையும் வழிநடாத்துற்கு கிராம சேவையாளர் மூலம் உங்கள் செயற்திட்டங்களை பிரதேச செயலாளர்; மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அமைச்சுடன் இணைந்து இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்   எனவே இந்த செயற்திட்டத்தை ஒன்றினைந்து அனைவரும் கொண்டு செல்வதன் மூலம் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய ஒரு நாடு உருவாகும் என்றார்.

(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது -- நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ..!{படங்கள்}-oneindia news (கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது -- நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ..!{படங்கள்}-oneindia news

(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது -- நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ..!{படங்கள்}-oneindia news