Home jaffna news கப்பலேந்திமாதாவில் கலைநிகழ்வுகள்

கப்பலேந்திமாதாவில் கலைநிகழ்வுகள்

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் சிறுவர் எழுச்சிவாரத்தின் இறுதி நாள் நேற்றைய தினம் கப்பலேந்திமாதா ஆலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
கப்பலேந்திமாதாவில் கலைநிகழ்வுகள்-oneindia news

பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மாலை 03.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மாணவ மாணவிகள்,மறையாசிரியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கப்பலேந்தி மாதா ஆலய சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மரதன் ஓட்டம்,கயிறு இழுத்தல்,நீர் நிரப்புதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version