இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது.
அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பளியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம்.
இதுவே ஆயுதமேந்திய பிரிவினைவாதத்திற்காக இளைஞர்களை வழிப்படுத்தியது. இது முட்டாள்த்தனமான கறுப்பு ஜுலையாகும். அந்தக் கலவரத்தில் உடைமைகளை இழந்த, உறவுகளை இழந்த, கைகால் முறிந்த தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். சரோஜா போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர், மோகன் போன்ற தோழர்கள் அப்படிபட்டவர்கள்தான். ஜே.வி.பி. தமிழர்களை தாக்கியிருந்தால் அவர்கள் ஏன் ஜே.வி.பியுடன் இணைந்துகொள்ள வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. இனவாத ரீதியாக செயற்படவில்லை என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அப்போது நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம். எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்ஸர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது