Home இலங்கை செய்திகள் கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.