Home crime news காணாமல் போன வரலாற்று புத்தகத்தை தேடி சக மாணவன் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

காணாமல் போன வரலாற்று புத்தகத்தை தேடி சக மாணவன் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவி ஒருவரை தாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவர் ஒருரை கைது செய்வது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி தனது பாட புத்தகத்தை பாடசாலையில் விட்டுச்சென்றுள்ள நிலையில், பாட புத்தகம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபரான மாணவனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, மாணவனின் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சந்தேக நபரான மாணவன் இந்த மாணவியை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான மாணவனை கைது செய்து பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்